
மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது?
சென்னை நீலாங்கரயைில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். உடல்நல பிரச்னை, வயது சார்ந்த விஷயங்கள், ஞாபக மறதி ஆகியவற்றால் அவர் சற்றே அவதிப்பட்டு வருகிறாராம். இப்போது அவருக்கு வயது என்பதால் 83 என்பதால, அவரை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம். சினிமா நிகழ்ச்சிகள், சினிமாவில் நடிப்பு என வர வேண்டாம். அவர் ஓய்வெடுத்து சரியானபின் அதை பார்த்துக்கொள்ளலாம் என குடும்பத்தினரும் நினைக்கிறார்களாம்.
கடந்த ஏப்ரல் மாதம் தமிழ் திரையுலகம் சார்பில் அவருக்கு பிரமாண்ட பாராட்டு விழா நடக்க இருந்தது. மனோஜ் மறைவு காரணமாக அதுவும் தள்ளிப்போய்விட்டது. தமிழ்சினிமாவில் அவர் 50 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிறார். இப்படி 50 ஆண்டுகளை கடந்த கமலுக்கு பாராட்டுவிழா நடந்தது. ரஜினிக்கு நடக்க இருக்கிறது. பாரதிராஜா, இளையராஜாவுக்கும் இப்படிப்பட்ட விழா நடத்தி, அவர்களை வாழும் காலத்திலேயே கவரவிக்க வேண்டும் என்பது திரையுலகினர் பலரின் ஆசையாக இருக்கிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!