
தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம்
இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்க, மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.
இப்படத்திற்குப் பிறகு தான் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ள படம் ஆரம்பமாகும் என்கிறார்கள். தனுஷின் அடுத்த வெளியீடாக "இட்லி கடை" படம் அக்டோபர் 1ம் தேதி வெளியாக உள்ளது. அவர் நடித்துள்ள ஹிந்திப் படமான "தேரே இஷ்க் மெயின்" நவம்பர் 28ம் தேதி வெளியாகிறது.
கடந்த மாதம் வெளியான "குபேரா" படம் தமிழில் தோல்வியடைந்தது. தெலுங்கில் மட்டுமே வெற்றி பெற்றது. அதனால், தனுஷ் அடுத்தடுத்து தமிழ்ப் படங்களில் மட்டுமே நடிப்பார் எனத் தெரிகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!