
ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத்
இது உண்மையா என விசாரித்தால் வினோத்தின் அடுத்த படத்தில் ரஜினி நடிக்கிறார் என்பது உண்மை அல்ல. காரணம் அடுத்து அவர் தனுஷை வைத்து படம் இயக்க உள்ளார். இன்னும் சொல்லப்போனால் அவர் தனுஷை வைத்து படம் இயக்க இருந்தார். அப்போது விஜய் பட வாய்ப்பு வர, அதுவும் விஜய்யின் கடைசி என்பதால் தனுஷிடம் கோரிக்கை வைத்துவிட்டு ஜனநாயகன் படம் இயக்க வந்தார்.
அடுத்து, வாக்கு கொடுத்தப்படி தனுஷ் படத்தை இயக்கப்போகிறார். அந்த படத்தை லலித் தயாரிக்கப் போகிறார். ரஜினி படம் பண்ணப் போகிறார் என்பது தவறான செய்தி என் கிறார்கள். ரஜினியின அடுத்த பட இயக்குனர் இன்னமும் முடிவாகவில்லை. ஆனால் அவரை வைத்து படம் தயாரிக்க வேல்ஸ், ஏஜிஎஸ், லைகா உட்பட பலர் தயாரிக்க ரெடியாக இருக்கிறார்களாம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!