
ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்
இந்த நிலையில் அடுத்து இவர் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த படத்தை டூரிஸ்ட் பேமிலி படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய ஒருவரே இயக்கப் போகிறாராம். இப்படத்தில் அபிஷன் ஜீவிந்திற்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் என்பவர் நடிக்கிறார். இவர் ஏற்கனவே தமிழில் ராங்கி, தக்ஸ் மற்றும் தற்போது செல்வராகவன் இயக்கியுள்ள 7ஜி ரெயின்போ காலனி -2 போன்ற படங்களில் நடித்துள்ளார். படத்திற்கு கரக்டட் மச்சி என்று தலைப்பு வைக்க ஆலோசித்து வருகிறார்கள். இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!