
மம்முட்டியை விட கிரேஸ் ஆண்டனிக்கு கதை சொல்ல தான் அதிக நேரம் பிடித்தது : இயக்குனர் ராம்
சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் ராம், கிரேஸ் ஆண்டனி குறித்து கூறும்போது, “இந்த படத்தில் நடித்த சிவாவுக்கு 4 நிமிடத்தில் கதை சொன்னேன். மலையாள நடிகரான அஜூ வர்கீஸுக்கு ஒரு நிமிடம் சொன்னதுமே அவர் ஒகே என்று சொல்லிவிட்டார்.. அவ்வளவு ஏன் மம்முட்டிக்கு கூட பேரன்பு படத்தின் கதையை ஐந்து நிமிடத்திலேயே சொல்லி விட்டேன். ஆனால் கிரேஸ் ஆண்டனிக்கு இந்த கதையை சொல்ல எனக்கு 20 நிமிடம் பிடித்தது. அந்த அளவுக்கு விலாவாரியாக கேட்டுக் கொண்டார். ஆனால் படப்பிடிப்பில் அவர் தொடர்ந்து நடிப்பதை பார்த்தபோது அவருக்கு இன்னும் சில காட்சிகளை கூடுதலாக சேர்க்கலாமோ என்று கூட எண்ணம் தோன்றியது. அந்த அளவுக்கு அவரது நடிப்பால் நான் கவரப்பட்டேன்” என்று கூறியுள்ளார்.
இந்த படத்தில் கிரேஸ் ஆண்டனி குறித்த ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் படத்தில் அஞ்சலி ஜோடியாக நடித்துள்ள நடிகர் அஜூ வர்கீஸும் இவரும் கடந்த வருடம் ஜீத்து ஜோசப் டைரக்ஷனில் நுணக்குழி படத்தில் இணைந்து ஜோடியாக நடித்திருந்தனர். இந்த பறந்து போ படத்தின் மூலம் இருவரும் ஒன்றாகவே தமிழ் திரை உலகில் அறிமுகமாகி இருக்கின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!