
பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில்
இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், ஹிந்தி சினிமாவில் தென்னிந்திய சினிமா கலைஞர்கள் மதிக்கப்படுவதில்லை என்ற ஒரு கருத்து வெளியாகி வருகிறதே. இது குறித்த உங்களது அனுபவம் என்ன? என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, ‛‛நானும் அது போன்று சிலர் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். என்றாலும் நான் ஹிந்தி படங்களில் நடித்தபோது அப்படி யாரும் என்னை அவமதித்ததில்லை. எல்லோரையும் போல்தான் என்னிடத்திலும் பழகினார்கள். சில பாலிவுட் நடிகர்கள் தென்னிந்திய நடிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் மரியாதையும் கொடுக்கிறார்கள். என் அனுபவத்தில் அவர்கள் தென்னிந்திய கலைஞர்களை அவமதிப்பது போன்ற சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை"" என்று கூறியிருக்கிறார் பிரியாமணி.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!