அனுஷ்காவின் ‛காட்டி படம் மீண்டும் தள்ளிப் போகிறதா?
Advertisement
Advertisement
அனுஷ்காவின் ‛காட்டி படம் மீண்டும் தள்ளிப் போகிறதா?
ஜூலை 03, 2025
அ நிறம் | அளவு
Advertisement
அனுஷ்கா நடிப்பில் ‛மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி" என்ற படம் திரைக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது கிரிஷ் இயக்கியுள்ள ‛காட்டி" என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே முடிவடைந்த நிலையில் முதலில் ஒரு ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் ஜூலை 11ம் தேதி காட்டி படம் திரைக்கு வருவதாக அறிவித்திருந்தார்கள். ஆனால் இந்த படத்தின் சிஜி பணிகள் இன்னும் முடிவடைய வில்லையாம். அதன் காரணமாகவே இப்படத்தை தயாரித்துள்ள யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இன்னும் படத்திற்கான விளம்பரங்களை தொடங்கவில்லையாம். அதனால் காட்டி படம் ஜூலை 11 ரிலீஸில் இருந்து தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக டோலிவுட்டில் தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அனுஷ்காவுடன் நடிகர் விக்ரம் பிரபுவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!