
சூர்யா சேதுபதி : தமிழ் சினிமாவில் அடுத்த வாரிசு நடிகர், வரவேற்பு பெறுவாரா ?
படம் வெளிவருவதற்கு முன்பே அவர் இப்படத்திற்காக நடந்த புரமோஷன் நிகழ்வுகளில் பேசியது, நடந்து கொண்ட விதம் சமூக வலைத்தளங்களில் கடுமையாக "டிரோல்" செய்யப்பட்டது. எதற்காக இவ்வளவு "டிரோல்" என்பது பலருக்கும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. வேறு எந்த ஒரு வாரிசு நடிகருக்கும் இப்படி நடந்ததில்லை என்று விஜய் சேதுபதி ரசிகர்கள் வருத்தப்பட்டனர்.
படம் வெளியாகும் இரண்டு நாட்களுக்கு முன்பு நேற்றே இப்படத்தின் பிரிமீயர் காட்சி நடைபெற்றது. படத்தைப் பார்த்த பலரும் பாராட்டியுள்ளனர். கதாபாத்திரத்திற்கேற்றபடி சூர்யா சேதுபதி நடித்துள்ளதாகச் சொல்கிறார்கள். படம் வெளிவந்த பின் அவரை "டிரோல்" செய்தவர்களே பாராட்டுவார்கள் என தியேட்டரை விட்டு வெளியில் வந்தவர்கள் பேசிக் கொண்டார்களாம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!