
தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா
தமிழ்த் திரையுலகம்தான் மற்ற மொழிகளிலிருந்து வரும் இயக்குனர்களையும், கலைஞர்களையும் சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்கிறது. இதற்கு முன்பு அப்படி பலர் வந்து இங்கு குறிப்பிடும்படியான படங்களையும், வெற்றிகளையும் தந்துள்ளார்கள். அவர்களது படங்கள் தோல்வியடைந்தால் கூட இங்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்ததில்லை.
ஆனால், தமிழ் இயக்குனர்கள் மற்ற மொழிகளுக்குச் சென்று வெற்றி பெற்றால் கூட அந்த வெற்றி அந்தப் படத்தில் நடித்த அந்தந்த மொழி நடிகர்கள்தான் காரணம் என பேசுகிறார்கள். அதேசமயம் அந்தப் படங்கள் தோல்வியடைந்தால் அதற்கான காரணத்தை இயக்குனர்கள் மீது போட்டுவிடுகிறார்கள்.
தெலுங்கிற்குச் சென்று "கேம் சேஞ்ஜர்" படத்தை இயக்கிய ஷங்கர் அந்தப் படத்தின் தோல்விக்குப் பிறகு தெலுங்கு ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். படம் வெளியாகி இத்தனை மாதங்களாகியும் அவர் மீதான விமர்சனம் நிற்கவில்லை. இதற்கு முன் தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குனர் ஷங்கர் கடைசியாக தமிழில் இயக்கிய "இந்தியன் 2", தெலுங்கில் இயக்கிய "கேம் சேஞ்ஜர்" என இரண்டு தோல்விப் படங்களைக் கொடுத்த காரணத்தால் இவ்வளவு விமர்சனத்துக்கு ஆளாகிறார்.
எந்த மொழியாக இருந்தாலும் சரி, சினிமாவில் வெற்றி பெற்றால் மட்டுமே புகழ்வார்கள் என கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!