
சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை
அபி நட்சத்திரா கதாநாயகியாக நடிக்க, காதல் சுகுமார், சவுந்தர் மற்றும் பலர் நடித்துள்ளனர். தீசன் இசை அமைத்துள்ளார். சிபி சதாசிவம் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் பற்றி இசக்கி கார்வண்ணன் கூறும்போது "மனித குலத்தில் பெண்களே முதலானவர்கள் என்கிற கருத்தை மையப்படுத்திய கதையாக இது உருவாகியுள்ளது. குறிப்பாக வரலாற்று உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழின பெண் குல தெய்வங்கள் பற்றி விரிவாக இந்த படத்தில் பேசப்பட்டிருக்கிறது.
ஊட்டி, குன்னூர் பகுதியைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளிலும் மற்றும் காரைக்குடியிலும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. விரைவில் வெளியாகும் விதமாக தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன" என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!