
பிளாஷ்பேக் : முதல் படத்திலேயே நீக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் காட்சிகள்
பெண்களுக்கு அவர்கள் சம்மதம் இல்லாமல் கட்டாயம் திருமணம் செய்து வைப்பது தொடர்பான கதை. அந்த காலத்தில் படத்தில் பணியாற்றும் இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் வெளியில் தெரிய மாட்டார்கள். ஆனால் இந்த படத்தின் டைட்டிலின் போது தொழில்நுட்ப கலைஞர்களை திரையில் காட்டினார். அந்த வகையில் வசனம் எழுதிய கருணாநிதியும் திரையில் தோன்றினார்.
எஸ்எஸ் ராஜேந்திரன் இந்த படத்தில் தான் ஒரு சிறிய கேரக்டரில் அறிமுகமானார். இதில் அவர் பிச்சைக்காரனாக நடித்தார். புரட்சிகரமான வசனங்களை பேசினார். அவர் காட்சிகளும் அவர் பேசிய வசனங்களும் அமைதிக்கு பங்கும் விளைவிக்கலாம் என்று கூறி தணிக்கை குழு நீக்கிவிட்டது. என்றாலும் டைட்டில் கார்டில் எஸ்எஸ் ராஜேந்திரன் பெயர் இடம் பெற்றது. பின்னர் அவர் "பராசக்தி" படத்தில் நடித்து புகழ் பெற்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!