
கூலி படத்திலிருந்து சிக்கிட்டு பாடல் வெளியீடு
ரஜினி நடிக்கும் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வரும் அனிருத், இந்த "கூலி" படத்திற்கும் அதிரடியான பாடல்களைக் கொடுத்திருக்கிறாராம். ஏற்கனவே சிக்கிட்டு வைப் என்ற பாடலின் சில விநாடிகளை வெளியிட்ட படக்குழு இன்று(ஜூன் 25) மாலை 6 மணியளவில் "சிக்கிட்டு..." முழு பாடலை வெளியிட்டனர். அறிவு எழுதிய இந்த பாடலை அனிருத், டி.ராஜேந்தர் மற்றும் அறிவு ஆகியோர் இணைந்து பாடி உள்ளனர். பாட்டு உடன் அனிருத், டி.ராஜேந்தர் ஆகியோரின் நடனங்களும், ரஜினியின் நடனமும் இடம் பெற்றுள்ளன. தற்போது இந்த பாடல் டிரெண்ட் ஆகி உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!