
ஏமாற்றிய ஏஸ், மயக்க வைக்குமா மதராஸி
தமிழில் விஜய் சேதுபதி ஜோடியாக "ஏஸ்" படம் மூலம் அறிமுகமானார். ஆனால், அந்தப் படம் அவருக்கு சரியான அறிமுகமாக தமிழில் அமையாமல் ஏமாற்றத்தைத் தந்தது. அடுத்து ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் "மதராஸி" படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார் ருக்மணி வசந்த்.
கன்னடத்தில் சில படங்களில் நடித்திருந்தாலும் அதற்குள்ளாகவே திறமையான நடிகை எனப் பெயரெடுத்தவர் ருக்மணி. "ஏஸ்" ஏமாற்றினாலும் "மதராஸி" படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களை மயங்க வைக்கும் என்ற நம்பிக்கை அப்படக்குழுவிற்கு இருக்கிறதாம். ருக்மணிக்கு மட்டுமல்லாது முருகதாஸ், சிவகார்த்திகேயன் ஆகியோருக்கும் அப்படம் மீதான நம்பிக்கை அதிகமாகவே உள்ளது என்கிறார்கள். செப்டம்பர் 5ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!