
விமல் நடிக்கும் 36வது படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்கியது!
விமல் நடிப்பில் சமீபத்தில் "பரமசிவன் பாத்திமா" என்ற படம் திரைக்கு வந்த நிலையில், அடுத்தபடியாக இரட்டை இயக்குனர்கள் நெல்சன் எல்தோஸ், மனிஷ் கே.தோப்பில் ஆகியோர் இயக்கும் படத்தில் நடிக்கிறார். கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்த படத்தை அஜித் விநாயகர் பிலிம்ஸ் என்ற மலையாள பட நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக முல்லை அரசி நடிக்கிறார். அவர்களுடன் சேத்தன், பருத்தி வீரன் சரவணன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடிக்க, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். காமெடி கலந்த கதையில் உருவாகும் இந்த விமலின் 36வது படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் விரைவில் வெளியாக உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!