
தமிழில் வெளியாகும் ஹாலிவுட் அனிமேஷன் படம்
எலியோ விண்வெளியை பற்றிய ஆசையுடன் வாழும் ஒரு சிறுவனுக்கு எதிர்பாராத விதமாக அண்டங்கள் முழுவதும் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. வித்தியாசமான கிரகங்கள், வினோதமான உயிரினங்களை சந்திக்கிறான். கூடவே இந்த பிரபஞ்சத்துக்கு ஏற்படும் ஒரு ஆபத்தையும் தடுத்து நிறுத்துகிறான். இதுதான் இந்த படத்தின் கதை. மடலின் ஷரபியன், டோமீ, ஏட்ரியன் மோலினா இயக்கியுள்ளார்கள்.
வருகிற 20ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்தியாவில் ஆங்கிலத்துடன் தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. 3டி தொழில்நுட்பத்திலும் பார்க்கலாம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!