
ஐடி., ரெய்டு நடக்கும் உணவகம் என்னுடையது அல்ல : ஆர்யா பேட்டி
இந்நிலையில் இந்த உணவகங்களில் இன்று(ஜூன் 18) காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகார் எதிரொலியாக இந்த சோதனை நடப்பதாக கூறப்படுகிறது. ஆர்யாவுக்கு சொந்தமான உணவு என்பதால் ஆர்யாவின் அண்ணா நகர் வீட்டிலும் ரெய்டு என தகவல் பரவ, மீடியாவினர் குவிந்தனர்.
இதுபற்றி ஆர்யாவை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறுகையில், ‛‛சென்னையில் ஐடி ரெய்டு நடக்கும் ஓட்டலுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது வேறு ஒருவருக்கு சொந்தமானது"" என தெரிவித்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த உணவகத்தை கேரளா மாநிலம் தலச்சேரியை சேர்ந்த மூசா என்பவரிடம் ஆர்யா குடும்பம் விற்றுவிட்டார்களாம். ஆர்யா குடும்ப உணவகம் என பெயர் இருந்ததால் ஆர்யா உணவகத்தில் ரெய்டு என செய்தி பரவி விட்டது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!