
விடாமல் துரத்திய போட்டோகிராபர்கள் : கோபமான சமந்தா
இதுபோன்ற சமயங்களில் அங்கே ஜிம்மிற்கு வரும் நட்சத்திரங்களை புகைப்படம் எடுப்பதற்காக போட்டோகிராபர்கள் காத்திருப்பர். சமந்தா எப்போதுமே இது போன்ற புகைப்பட கலைஞர்களுக்கு சிரித்தபடி போஸ் கொடுத்து விட்டு செல்வார். அப்படித்தான் இந்த முறையும் ஜிம்மிலிருந்து வெளியே வந்த போது அவருக்கு ஒரு போன் வந்தது. அந்த போனை அட்டென்ட் செய்து பேசியபடியே வந்தார்.
தனது கார் வேறு ஒரு இடத்தில் நிறுத்தப்பட்டிருந்ததை கவனிக்காமல் போனில் பேசியபடி வந்தார். அவரை போட்டோகிராபர்கள் போட்டோ எடுக்க முற்பட்டனர். பின்னர் மீண்டும் ஜிம்முக்குள் நுழைந்து வேறு இடத்தில் பார்க்கிங் செய்யப்பட்ட தனது காரில் ஏறினார். அப்போதும் போட்டோகிராபர்கள் விடாமல் அவரை போட்டோ எடுக்க முயற்சித்த கடுப்பான சமந்தா, போதும் நிறுத்துங்கள் என வேகமாக காரில் ஏறி பறந்தார். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!