
மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க”
திரில்லர் ஜானரில் மைல்கல்லாக இன்றளவும் கொண்டாடப்படும் இப்படம் நவீன தொழில் நுட்பத்துடன் ஜூன் 27ம் தேதி மீண்டும் வெளியாகிறது. வாழ்க்கையில் கஷ்டபட்டு ஒரு நல்ல நிலைக்கு முன்னேறிய இளைஞன், ஒரு சிறு உதவி செய்யபோக, மிகப்பெரிய ரவுடிகளின் கூட்டத்திடம் மாட்டிக் கொள்கிறான். அவன் அந்த ரவுடிகளிடமிருந்து தப்பினானா என்பது தான் இந்தப் படத்தின் கதை. தற்போது நவீன ஏஐ தொழில் நுட்பத்தில் முழுப்படமும் மெருக்கேற்றப்பட்டு, 4கே தரத்தில் நவீன அட்மாஸ் சவுண்ட் வடிவமைப்புடன், புதிய டிஜிட்டல் பதிப்பாக வெளியாக உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!