
ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ!
தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்களில் நடித்து வரும் ஸ்ரீலீலா, தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‛பராசக்தி" படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக போகிறார். ஏற்கனவே அல்லு அர்ஜுன் நடித்த ‛புஷ்பா-2" படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி தமிழக ரசிகர்களுக்கு பரீட்சயமாகிவிட்ட ஸ்ரீ லீலா, பராசக்தி படத்தில் 1960 காலகட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் ஜூன் 14ம் தேதியான நேற்று ஸ்ரீலீலா தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் இயக்குனர் சுதா கொங்கரா. அந்த வீடியோவில், சிவாஜி, சரோஜாதேவி நடித்த ‛பார்த்தால் பசி தீரும்" படத்தில் இடம்பெற்ற கொடி அசைந்ததும் காற்று வந்ததா என்ற பாடலுக்கு ஸ்ரீலீலா குழந்தைத்தனமாக நடனமாடி இருக்கிறார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!