
டாப் இயக்குனர்களுடனான கூட்டணி சரிவு : கவனிப்பாரா கமல்ஹாசன் ?
ஆனால், அவர் நடித்து கடைசியாக வெளிவந்த இரண்டு படங்களான "இந்தியன் 2, தக் லைப்" ஆகிய படங்கள் வியாபார ரீதியாக தோல்வியாக அமைந்தவை. ஆனாலும், அந்தப் படங்கள் கடுமையாக கிண்டலடிக்கப்பட்டதுதான் நிகழ்ந்தது. இத்தனைக்கும் அந்த இரண்டு படங்களையும் இயக்கியவர்கள் தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர்களான ஷங்கர், மணிரத்னம்.
ஷங்கருடன் 28 வருட இடைவெளிக்குப் பிறகும், மணிரத்னத்துடன் 37 வருட இடைவெளிக்குப் பிறகும் மீண்டும் கூட்டணி அமைத்தார். நீண்டகால இடைவெளி, அவர்கள் முதலில் இணைந்த "இந்தியன்" மற்றும் "நாயகன்" படங்கள் தமிழ் சினிமாவில் முக்கியமான படங்கள் என்று இன்றளவும் பேசப்படுகின்றன. இத்தனை வருட இடைவெளி தலைமுறை இடைவெளியாகவும் அமைந்து இன்றைய இளம் ரசிகர்களை கவர முடியாமல் போனதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.
அதேசமயம், புதிய கூட்டணியாக லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்த "விக்ரம்" படம் கமல்ஹாசனின் சினிமா உலக வரலாற்றில் அதிக வசூலைக் குவித்த படம் என்ற சாதனையைப் பெற்றுத் தந்தது. இன்றைய தலைமுறை இயக்குனர்களுடனான கூட்டணியை கமல்ஹாசன் முயற்சிக்க வேண்டும் என்ற குரல் கோலிவுட்டில் கேட்க ஆரம்பித்துள்ளது. அவருடைய அடுத்த படமான 237வது படத்தை ஸ்டன்ட் மாஸ்டர்களான அன்பறிவு இயக்க உள்ளார்கள். அந்தப் படத்தில் அதிக கவனம் செலுத்தி "விக்ரம்" படத்தை விடவும் பெரும் வெற்றியைக் கொடுக்கும் விதத்தில் அவர் உழைக்க வேண்டும் என அவரது ரசிகர்களும், திரையுலக நலம் விரும்பிகளும் எதிர்பார்க்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!