
ஜுலை, ஆகஸ்ட்டில் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட முயற்சி
12 வருடங்களாக முடங்கிக் கிடந்த "மதகஜ ராஜா" படம் இந்த வருடப் பொங்கலுக்கு வெளிவந்து எதிர்பாராத வசூலைப் பெற்று வெற்றிப் படமாக அமைந்தது. அதனால், ஒரு படம் ரசிகர்களுக்குப் பிடிக்கும்படியாக இருந்தால் எத்தனை வருடங்கள் கழித்து வந்தாலும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை முடங்கிக் கிடக்கும் படங்களை எடுத்தவர்களுக்கு வந்தது.
கவுதம் மேனன் சமீபத்தில் "துருவ நட்சத்திரம்" படத்தை ஒரு முதலீட்டாளருக்குத் திரையிட்டுக் காட்டியுள்ளார். படத்தைப் பார்த்த அவர் பிடித்தாகச் சொல்லியிருக்கிறார். அதனால், இப்படத்திற்கான நிதிச் சிக்கல்கள், சட்டச் சிக்கல்கள் ஆகியவற்றைத் தீர்க்கும் முயற்சியில் கவுதம் இறங்கியிருக்கிறார். படத்தை வெளியிடும் வரையில் வேறு படங்களில் நடிக்கவோ, இயக்கவோ செய்யாமல் "துருவ நட்சத்திரம்" படத்தை வெளியிடுவதை மட்டும் முதல் கடமையாக வைத்திருக்கிறாராம்.
சீக்கிரமே நட்சத்திரத்திற்கு வெளிச்சம் கிடைத்தால் சரி.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!