
ஆக்டர் ஆன தஞ்சாவூர் டாக்டர்
தற்போது ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் "ஹார்ட் பீட்" தொடரில் டாக்டராகவே நடிக்கிறார். அவரது கதாபாத்திரமான "ரீனா" பாப்புலராகி உள்ளது. அடுத்து சினிமாவில் நடிக்க தயாராகி வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது "தமிழ் சினிமா கதாநாயகிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் வலுவான கதாபாத்திரங்களைக் கொடுத்து வருகிறது. அந்த வகையில், நடிகைகள் ரேவதி, நதியா, ஜோதிகா மற்றும் சாய்பல்லவி ஆகியோர் வழியில் நானும் தரமான கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்க இருக்கிறேன். நடிப்புத் திறமையை நிரூபிக்கும் வகையிலான கதாபாத்திரம் வரும்போது முழு அர்ப்பணிப்புடன் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். நிறைய வாய்ப்புகள் வருகிறது, கதைகள் கேட்கிறேன். விரைவில் அறிவிப்பு வெளிவரும்" என்கிறார் தீபா.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!