
அகண்டா 2 படத்தில் வில்லனாக ஆதி
இந்நிலையில் நேற்று வெளியான தெலுங்குப் படமான "அகண்டா 2" படத்தின் டீசரில் சில வினாடிகளே இடம் பெற்ற ஆதியின் தோற்றம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. படத்தில் அவர் அகோரி கதாபாத்திரத்தில் நடிக்கலாம் எனத் தெரிகிறது. அவரைப் பார்த்து வீர வசனம் பேசி, தன்னைத் தாக்க வந்தவர்களை சூலாயுதத்தை சுற்ற வைத்து துவம்சம் செய்யும் பாலகிருஷ்ணாவின் அதிரடி ஆக்ஷன் அவரது ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.
வெளியான 24 மணி நேரத்திற்குள்ளாக இந்த டீசர் 22 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. 24 மணி நேர முடிவில் புதிய சாதனையைப் படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. யு டியூப் டிரென்டிங்கிலும் இந்த டீசர் தான் முதலிடத்தில் உள்ளது. எவ்வளவோ "டிரோல்கள்" வந்தாலும் பாலகிருஷ்ணா படம் கடந்த சில வருடங்களாக வசூலில் குறை வைக்காமல் லாபத்தைத் தந்து கொண்டிருக்கிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!