
பிளாஷ்பேக் : என்ஜினீயர் மோகன், கிரேஸி மோகன் ஆனது எப்படி?
அவரது நாடகங்களில் அவரது தம்பி பாலாஜி நடித்தார். நாடகத்தில் அவரது பெயர் மாது. கிரேஸி மோகன் இயக்கிய எல்லா நாடகத்தின் நாயகன் பெயரும் மாதுதான். அதுதான் பாலாஜி, "மாது பாலாஜி" ஆனார். பின்னர் கமல்ஹாசன் அழைத்து "அபூர்வ சகோதரர்கள்" படத்திற்கு வசனம் எழுத சொன்னார். அவர் எழுதிய வசனங்கள் பெரிய ஹிட். கமல் அவரை தன்னுடனேயே வைத்துக் கொண்டார்.
கே.பாலச்சந்தர், கமல் படங்கள் அல்லாது வேறு பல படங்களுக்கும் வசனம் எழுதினார். சினிமாவில் பிசியாக இருந்தாலும் மற்றொரு பக்கம் நாடகத்தையும் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வந்தார். கருணாநிதி, இளங்கோவன், ஆரூர்தாஸ், ஸ்ரீதர், பாலமுருகன், பாலசந்தர், பாக்யராஜ், சுஜாதா, ஏ.எல்.நாராயணன், பாலகுமாரன் வரிசையில் கிரேஸி மோகனுக்கும் இடம் உண்டு.
அண்மையில் நடந்த கிரேஸி மோகன் விழாவில் கமல் பேசியபோது குறிப்பிட்டார். "எல்லோரும் செத்த பிறகு சொர்க்கத்துக்கு போக விரும்புவார்கள், ஆனால் மோகன் வாழும்போதே சொர்க்கத்தில் வாழ்ந்தவர்" என்றார். இன்று கிரேஸி மோகனின் 6வது நினைவு நாள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!