
வெற்றிமாறனை சுற்றி வரும் வதந்திகள், பதில் சொல்வாரா ?
ஆனால், கடந்த இரண்டு நாட்களாக "வட சென்னை" இரண்டாம் பாகத்தில் சிம்பு நடிக்கப் போகிறார் என ஒரு தகவல். வட சென்னையை மையப்படுத்திய ஒரு கதையில் வெற்றிமாறன் நடிக்க சிம்பு நடிக்க உள்ளார் என மற்றொரு தகவல். இதில் எது உண்மை என்பது அறிவிக்கும் வரை தெரியாது. அல்லது வதந்தியா என்பதும் தெரியாது. இருந்தாலும் இது பரவி வருகிறது.
அடுத்து, வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள "வாடிவாசல்" படம் கைவிடப்பட்டது என கடந்த ஒரு வாரமாக ஒரு தகவல் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்திற்காக பாடல் பதிவு ஆரம்பித்துவிட்டோம் என இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் சில மாதங்களக்கு முன்பே பதிவிட்டிருந்தார். அதையும் மீறி படம் "டிராப்" என பரப்பி வருகிறார்கள்.
இப்படியான வதந்திகளுக்கு சம்பந்தப்பட்ட வெற்றிமாறன்தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். என்ன வதந்தி வந்தாலும் சில இயக்குனர்கள் எதைப் பற்றியும் வாயைத் திறக்காமலேயே இருக்கிறார்கள். அது அவர்களைப் பற்றிய ஒரு நெகட்டிவ் இமேஜை உருவாக்குகிறது என்பதைப் பற்றிக் கூட கலைப்படாமல் இருப்பதுதான் ஆச்சரியமாக உள்ளது என திரையுலகிலேயே பேசிக் கொள்கிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!