குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு
ஜூன் 09, 2025
Advertisement
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் "குபேரா". இதில் நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப், பாக்யராஜ், சுனைனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாந்த் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் வேலைகள் நடக்கின்றன. தமிழ், தெலுங்கில் வரும் ஜூன் 20ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.
இந்த படத்தின் நீளம் 3 மணி நேர 15 நிமிடங்கள் ஆக இருந்தது. அதன் பின்னர் படக்குழுவினர் குபேரா படத்தை மீண்டும் பார்த்து சற்று நீளத்தை குறைத்து 2 மணி நேர 50 நிமிடங்கள் கொண்ட படமாக மாற்றி உள்ளனர் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!