
ஒன்றரை லட்ச ரூபாய் டி ஷர்ட் அணிந்த மகேஷ்பாபு
நிகழ்ச்சியில் நடிகர் மகேஷ்பாபு அணிந்து வந்த டி-ஷர்ட் பற்றி சமூக வலைத்தளங்களில் பேசு பொருளானது. பார்ப்பதற்கு எளிமையான டிசைன் போல தோற்றமளித்தாலும் அந்த டி-ஷர்ட்டின் விலை ரூ 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ளது என ரசிகரகள் சமூக வலைத்தளங்களில் அது பற்றி விவாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
சினிமா பிரபலங்கள் கோடி ரூபாய் மதிப்பிலான கைக்கடிகாரங்கள், விலையுயர்ந்த ஷுக்கள், டி-ஷர்ட், சட்டை அணிவதுதான் தற்போது ஒரு பேஷனாக உள்ளது. பெண்கள் திருமணத்திற்கு அணியும் பட்டுப் புடவைகள் சில பல லட்சங்கள் இருக்கும் நிலையில் ஆண்கள் அணியும் சட்டைகள் அது போல விலை உயர்ந்ததாக இருந்தால் என்ன தவறு என்றும் சிலர் கேட்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!