
மம்பட்டியான் பாடல் காப்பிரைட் : நடிகர் தியாகராஜன் பெருந்தன்மை
சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற டூரிஸ்ட் பேமிலி படத்திலும் இந்த பாடல் முக்கியமான காட்சியில் இடம் பெறுகிறது. அந்த படத்தில் பயன்படுத்த முறைப்படி படக்குழு அனுமதி பெற்றதா? அப்படி அனுமதி வாங்காத பட்சத்தில் நீங்க நோட்டீஸ் அனுப்பினீர்களா என்று நடிகர் தியாகராஜனிடம் கேட்டபோது ""அந்த பாடல் ஹிட்டானது சந்தோஷம். இன்றும் உலக நாடுகளில் அந்த பாடல் ஒலித்துக் கொண்டே இருப்பது இன்னும் சந்தோஷம். டூரிஸ்ட் பேமிலி படத்தில் இடம் பெற்றது கூடுதல் சந்தோஷம். என்னிடம் யாரும் முறைப்படி அந்த பாடலை பயன்படுத்த அனுமதி வாங்கவில்லை.
டூரிஸ்ட் பேமிலி ஹிட்டான பின்னரும் கூட யாரும் நன்றி தெரிவிக்கவில்லை. ஆனாலும், என் பாடல் இப்போது வந்திருக்கும் படத்திலும் ஒலித்து இருப்பதை விட வேறு என்ன வேண்டும். திருமண வீடு, விசேஷ வீடுகளில் பலர் என் பாடலை மகிழ்ச்சிக்காக பயன்படுகிறார்கள். அதை பார்த்து நானும் மகிழ்கிறேன். அதை தொடர்ச்சியாக தங்கள் கொண்டாட்டங்களுக்கு பயன்படுத்தி பாடலை உயிர்ப்போடு வைத்து இருப்பவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அது தொடரட்டும்.
யாருக்கும் நோட்டீஸ் அனுப்பமாட்டேன். தமன் இசையமைத்த அந்த பாடலை நா.முத்துக்குமார் எழுதியிருந்தாலும், முதல் சில வரிகளை நான்தான் எழுதினேன். குழந்தை வளர்ந்து வெற்றி பெற்றால் பெற்றோர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியோ, அதேபோல் அந்த பாடல் பிரபலமாவதால் எனக்கு மகிழ்ச்சி" என்று சிரிக்கிறார் நடிகர் தியாகராஜன்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!