
தக் லைப் விவகாரத்தால் கலக்கத்தில் ஜனநாயகன்
ஜூன் 04, 2025
Advertisement
கமலின் தக் லைப் கர்நாடகாவில் ரிலீஸ் ஆகுமா? எப்போது ரிலீஸ் ஆகும் என்பதில் சட்ட சிக்கல்கள் நீடிக்கின்றன. இந்நிலையில், இந்த விவகாரத்தால் விஜய் நடிக்கும் ஜனநாயகன் படக்குழுவினரும் பயத்தில் தவிக்கிறார்கள். காரணம், ஜனநாயகன் படத்தை பெங்களூரை சேர்ந்த கேவிஎன் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. தக்லைப் படத்துக்கு கர்நாடகாவில் சிக்கல் ஏற்பட்டால், தங்களின் படத்துக்கு ஒரு சிலர் பிரச்னை பண்ணலாம். சில அரசியல் கட்சிகள் பஞ்சாயத்து கூட்டலாம். ஜனநாயகன் ரிலீஸ் ஆகும்போது எதிர்ப்புகள் வரலாம். அதனால், தக் லைப் விவகாரம் எளிதாக முடிய வேண்டும். கர்நாடகாவில் படம் வெளியாகி வெற்றி பெற வேண்டும் என்று ஜனநாயகன் படக்குழு நினைக்கிறதாம்.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!