
என்றென்றும் உங்கள் நண்பன் : மணிரத்னத்துக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து
“பிறந்தநாள் வாழ்த்துகள், மணிரத்னம். "நாயகன்" முதல் "தக் லைப்" வரை சக கலைஞராக, குடும்பமாக, சக கனவு காண்பவராக மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக சினிமாவின் வாழ்நாள் மாணவர்களாக, நாம் ஒன்றாகக் காலத்தைக் கடந்து வந்துள்ளோம். ஒவ்வொரு அத்தியாத்திலும் உங்கள் இருப்பு பலத்தின் ஆதராரமாக இருந்து வருகிறது. சந்தேகம் ஏற்படும் தருணங்களில், எனது மனம் திரும்பும், மற்றவர்களைப் போல சினிமாவின் மொழியுடன் ஆழமாகப் பழகிய ஆன்மா.
உங்கள் கதைகள் தொடர்ந்து வெளிவரட்டும். ஏனென்றால் ஒவ்வொரு பிரேமிலும், உங்கள் பார்வை சினிமாவிற்கு ஆழம், அழகு மற்றும் அர்த்தத்தைக் கொண்டு வருகிறது. என்றென்றும் உங்கள் நண்பன், கமல்ஹாசன்,” என வாழ்த்தியுள்ளார்.
"நாயகன்" படத்திற்குப் பிறகு இருவரும் இணைந்துள்ள "தக் லைப்" படம் இந்த வாரம் ஜுன் 5ம் தேதி வெளியாகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!