
கிஷன் தாஸின் புதிய படம் ஆரோமலே
மே 30, 2025
Advertisement
முதலும் நீ முடிவும் நீ படத்தில் நடித்து பிரபலமானவர் கிஷன் தாஸ். இதையடுத்து தருணம் படத்திலும் நடித்தார். அடுத்து ஆரோமலே என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். இதில் அவர் உடன் நடிகர் ஹர்ஷத் கானும் நடிக்கிறார். இவர் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படத்தில் குட்டி டிராகனாக நடித்தவர். இது தவிர விஜே சித்து இயக்கி, நடிக்க உள்ள "டயங்கரம்" படத்திலும் ஹர்ஷத் கான் நடிக்கிறார். நாயகியாக சிவாத்மிகா ராஜசேகர் நடிக்க, முக்கிய வேடங்களில் விடிவி கணேஷ் நடிக்கிறார். புதியவர் சரங் தியாகு இயக்குகிறார். சித்து குமார் இசையமைக்கிறார். மார்க் ஆண்டனி, எனிமி உள்ளிட்ட படங்களை தயாரித்த மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் அறிமுக வீடியோவினை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார். கலகலப்பாக நகரும் இந்த வீடியோவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!