
துபாய் பயணத்தால் ராஜேஷிற்கு ஏற்பட்ட டென்ஷன் : மகன் திருமணத்தை பார்க்காமலே மறைவு
சினிமாவில் நல்ல மனிதர் என்று பெயர் எடுத்தவர், கெட்ட பழக்க வழக்கங்கள் இல்லாதவர். திடீரென நேற்று காலை காலமானது குறித்து விசாரித்தால், அவர் ஏற்கனவே ஹார்ட் ஆபரேஷன் செய்து இருக்கிறார். சமீபத்தில் துபாய் போயிட்டு வந்தார். அங்கே உள்ள உணவு, தண்ணீர் அவருக்கு செட் ஆகவில்லை. துபாயிலிருந்து சளி தொந்தரவு உடன் வந்துள்ளார். தவிர, அலைச்சல் வேறு. அந்த டென்ஷன் காரணமாகவே அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.
அடுத்தவாரம் அவர் மகனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது. அதை பார்க்காமலே போய்விட்டார். தனது தந்தை, தாய், மனைவி கல்லறை இருக்கும் இடத்தில் தனக்கும் பல ஆண்டுகளுக்கு முன்பே அவர் கல்லறை கட்டிவிட்டார். அதை ஒரு பேட்டியில் விரிவாக சொல்லியிருக்கிறார். அந்த கல்லறையில் எழுதப்பட வேண்டிய வாசகத்தை கூட முன்பே முடிவு செய்துவிட்டார்.
அவர் மகள் கனடாவில் இருந்து வந்து கொண்டிருக்கிறார். நாளை அவர் வந்துவிடுவார். ராஜேஷின் இறுதிச்சடங்கு சனிக்கிழமை மாலை 3 மணியளவில் கீழ்ப்பாக்கத்தில் நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ராஜேஷின் உடல் நேற்று எம்பார்மிங் செய்யப்பட்டுள்ளது. மகள் வர வேண்டி இருப்பதால் எம்பார்மிங் செய்துள்ளதாக கூறப்படுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!