
தக் லைப் கூடவே வரும் மூன்று படங்கள் : தியேட்டர்கள் கிடைக்குமா ?
ஆனால், "தக் லைப்" வெளியாகும் அதே வாரத்தில் "பரமசிவன் பாத்திமா, பேரன்பும் பெருங்கோபமும், மெட்ராஸ் மேட்னி" ஆகிய படங்களை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார்கள். "தக் லைப்" படத்தை ஆளும் கட்சிக்குச் சொந்தமான ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அதனால், முக்கியமான தியேட்டர்கள் அனைத்தையும் அவர்களே எளிதில் பெற்றுவிடுவார்கள். அப்படியான ஒரு சூழலில் மற்ற படங்களுக்கு முக்கியமான தியேட்டர்கள் எப்படி கிடைக்கும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
பெரிய படம், சிறிய படம் என்பதெல்லாம் வெளியீட்டிற்கு முன்புதான். படம் வெளியான பின்பு வரவேற்பைப் பெறும் படமே பெரிய படம் என்று சொல்வார்கள். மே 1ம் தேதி வெளியீட்டிற்கு முன்பு "ரெட்ரோ" பெரிய படமாக இருந்தது. ஆனால், வெளியீட்டிற்குப் பின்பு அதேநாளில் வந்த "டூரிஸ்ட் பேமிலி" படமே பெரிய படமாக மாறியது. அது அடுத்த வாரம் நடக்குமா அல்லது மற்ற மூன்று படங்களின் வெளியீட்டுத் தேதிகள் மாற்றப்படவும் வாய்ப்புள்ளதா என்பது விரைவில் தெரிந்துவிடும்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!