
பவன் கல்யாண் பட உரிமையைப் பெறுவதைத் தவிர்க்கும் தில் ராஜு
இந்நிலையில் பவன் கல்யாண் நடித்து ஜுன் 12ம் தேதி வெளியாக உள்ள "ஹரிஹர வீரமல்லு" படத்தை வாங்கி வினியோகிப்பதிலிருந்து தில் ராஜு விலகியுள்ளதாகத் தெரிகிறது. பொதுவாக முன்னணி நடிகர்கள் படங்கள் வரும்போது அவற்றை வாங்கி வினியோகம் செய்வார் தில் ராஜு.
தற்போது தெலங்கானா மாநில திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தலைவராகவும் இருப்பதால் தேவையற்ற சர்ச்சைகள் வர வேண்டாமென்று அவர் விரும்புவதாகச் சொல்கிறார்கள். அடுத்த சில வாரங்களுக்கு தெலுங்குத் திரையுலகத்தில் எது நடந்தாலும் அது பரபரப்பாகவே பேசப்படும் நிலை உள்ளது. "ஹரிஹர வீரமல்லு" வெளியீட்டிற்குப் பிறகுதான் அது குறையும் வாய்ப்புள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!