
7 ஜி ரெயின்போ காலனி இரண்டாம் பாகம் இந்த ஆண்டு ரிலீஸ்
அப்படத்தின் இரண்டாம் பாகத்தை செல்வராகவன் இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ரவி கிருஷ்ணா, அனஸ்வரா ராஜன் மற்றும் பலர் நடிக்க ஆரம்பித்தார்கள். இந்த ஆண்டின் முதல் நாளான ஜனவரி 1ம் தேதியன்று படத்தின் போஸ்டரையும் வெளியிட்டிருந்தார்கள்.
படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்த நிலையில் எஞ்சிய காட்சிகள் படமாக்கப்படுவதை கொஞ்சம் தள்ளி வைத்ததாகத் தகவல். இப்படத்தின் தயாரிப்பாளரான ஏஎம் ரத்னம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்கும் "ஹரிஹர வீர மல்லு" படத்தை முடித்து வெளியிடுவதில் மும்முரமாக இருக்கிறார். இந்தப் படம் ஜுன் 12ல் வெளியாக உள்ளது. அதன் பிறகு "7 ஜி ரெயின்போ காலனி" படத்தின் படப்பிடிப்பை மீண்டும் ஆரம்பித்து குறுகிய காலத்தில் முடிக்க உள்ளார்களாம்.
விரைவில் படம் பற்றிய அப்டேட்கள் வெளியாகும் என்றும், இந்த வருடத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், இன்று சென்னையில் நடைபெற்ற "ஹரிஹர வீர மல்லு" படத்தின் நிகழ்வில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் தெரிவித்தார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!