
மீண்டும் இணையும் வடிவேலு - பார்த்திபன்
ஒரு காலத்தில் பார்த்திபன், வடிவேலு கூட்டணியின் காமெடி தெறிக்க விட்டது. "பாரதி கண்ணம்மா, காதல் கிறுக்கன், குண்டக்க மண்டக்க, வெற்றிகொடிகட்டு, காக்கை சிறகினிலே" உள்பட பல படங்கள் இவர்களின் காமெடியால் புகழ்பெற்றது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது பார்த்திபனும், வடிவேலுவை நேற்று சந்தித்து பேசினார். அவர் சொன்ன கதை வடிவேலுக்கு பிடித்திருக்கிறது. இருவருக்கும் சமமான வாய்ப்பு கொண்ட கதையாக இது உருவாகி உள்ளது.
இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பார்த்திபன், "நகைச்சுவையில் மட்டுமல்ல, நடிப்பிலும் ஈடில்லாதவர் வடிவேலு. சந்தித்தோம் இன்று. விரைவில் படம் வெளியாகும்" என்று குறிப்பிட்டு உள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!