
ஓ மாறா - தக்லைப் படத்தில் சிம்புவின் லிரிக் வீடியோ வெளியானது!
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், நாசர், அபிராமி நடிப்பில் உருவாகியுள்ள படம் "தக்லைப்". ஜூன் ஐந்தாம் தேதி திரைக்கு வரும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் "ஜிங்குச்சா, சுகர் பேபி" ஆகிய பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வைரலான நிலையில், தற்போது சிம்புவின் "ஓ மாறா" என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஏ. ஆர். ரஹ்மான் இசையில் உருவாகி உள்ள இந்த பாடலை பால் டப்பா எழுதி, பாடியுள்ளார். திரிஷாவின் சுகர் பேபி பாடலைப் போலவே இந்த ஓ மாறா பாடலுக்கும் ரசிகர்கள் பெரிய அளவில் லைக் கொடுத்து வைரலாக்கி வருகிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!