
கருடன் போல வரவேற்பைப் பெறுமா : தெலுங்கு ரீமேக் பைரவம்
தெலுங்கில் பெல்லம்கொண்டா சீனிவாஸ், மஞ்சு மனோஜ், நர ரோகித், அதிதி சங்கர், கயல் ஆனந்தி, ஜெயசுதா மற்றும் பலர் நடித்துள்ளார்கள். தமிழில் வந்த "கருடன்" படம் 50 கோடி வசூலித்து வெற்றிப் படமாக அமைந்தது. கிராமத்துப் பின்னணியில் நட்பு, துரோகம் என மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப் பொருத்தமான ஒரு படம்.
அதனால் படத்தை தெலுங்கில் ரீமேக் உரிமை வாங்கி முடித்து இந்த வாரம் வெளியிடுகிறார்கள். படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், தமிழைப் போலவே தெலுங்கிலும் இந்தப் படம் வரவேற்பைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!