
பிஸியான நடிகரான இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்
நடிகர் அவதாரம் குறித்து அவர் பேசுகையில் "நான் இயக்கிய சின்ன கவுண்டர், எஜமான் படங்களில் சின்ன, சின்ன வேடங்களில் நடித்தேன். பின்னர், பிரபுதேவா நடித்த தேவி படத்தின் மூலம் நடிகராக ரீ என்ட்ரி ஆனேன். தனுசின் தொடரியில் நல்ல வேடம். அதை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறேன். குறிப்பாக, சூரியின் கருடன் படத்தில் நான் அமைச்சராக நடித்தது நல்ல பெயரை பெற்று கொடுத்தது. அடுத்து இன்னொரு படத்தில் முதல்வராக நடித்து இருக்கிறேன்.
இப்போது பிரபு நடிக்கும் ராஜபுத்திரன் படத்தில் ஒரு வித்தியாசமான ரோலில் நடித்து இருக்கிறேன். தாதா மாதிரியான ஒரு சஸ்பென்ஸ் கேரக்டர் அது. இந்த படங்களை தவிர, எழில் இயக்கும் தேசிங்குராஜா 2 மற்றும் ரெட் லேபிள் உட்பட பல படங்களில் நடித்து இருக்கிறேன். அது குறித்த அறிவிப்பு முறைப்படி வரும். இயக்குனராக பல வெற்றி படங்களை கொடுத்தது மாதிரி, நடிப்பும் நிறைவாக இருக்கிறது" என்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!