பிளாஷ்பேக்: 9 வேடங்களில் நடித்த பெண் சிவாஜி
மே 26, 2025
Advertisement
நடிகை மனோரமாவை ஒரு மேடையில் நடிகர் சோ "ஆச்சி ஒரு பெண் சிவாஜி" என்று வர்ணித்தார். அதன்பிறகு ஒரு சில படங்களில் மனோரமாவிற்கு அந்த பட்டத்துடன் டைட்டில் போட்டார்கள். ஆனால் இதனை மனோரமா ஏற்கவில்லை. "என்னை பெண் சிவாஜி என்று அழைக்க வேண்டாம். சிவாஜியின் கால் தூசுக்குகூட நான் வரமாட்டேன்" என்று அதனை தடுத்து விட்டார்.
ஆனால் அவரை பெண் சிவாஜி என்று அழைக்கிற அளவிற்கு சாதனைகள் படைத்தார். சிவாஜி போன்று அவர் நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை. நவராத்திரி படத்தில் சிவாஜி 9 வேடத்தில் நடித்தது போன்று "கண்காட்சி" என்ற படத்தில் மனோரமாவும் 9 வேடங்களில் நடித்தார்.
மனோரமா நடிக்க தயங்கி நின்றபோது படத்தை இயக்கிய ஏ.பி.நாகராஜன் "உன் திறமை மீது எனக்கு நம்பிக்கையிருக்கு. தைரியமா செய்" என்று நம்பிக்கையை ஊட்டினார். மனோரமாவுக்குச் மிகச்சிறந்த நடிகை என்ற பெயரை வாங்கிக் கொடுத்தது, இப்படம்.
இன்று ஆச்சி மனோரமாவிற்கு 88வது பிறந்த நாள்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!