
பிளாஷ்பேக் : இந்தியா முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோல்வி அடைந்த அப்னா தேஷ்
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் பின்னணியில், உருவான படம். சுதந்திரம் அடைந்த பின் இந்தியா எதிர்கொண்ட பிரச்னைகளை இந்தப் படம் பேசியது. அப்போது பிரபல பாடகியாக இருந்த புஷ்பா ஹன்ஸ் நாயகியாக நடித்தார். உமேஷ் சர்மா, சந்திரசேகர், கேசவ் ராவ் ததே உட்பட பலர் நடித்த இந்தப் படத்திற்கு புருஷோத்தம் இசை அமைத்தார்.
தமிழ் பதிப்புக்கு ஜி.கோவிந்த ராஜுலு இசை அமைக்க, பாடல்களை ராஜகோபால ஐயர் எழுதினார். 1949ம் ஆண்டு தமிழில் ரிலீஸான இந்த படம் தெலுங்கிலும் வெளியானது. இந்தியா முழுவதும் வரவேற்பை பெற்ற இந்த படம், தமிழில் போதிய வரவேற்பை பெறவில்லை. அறிமுகமில்லாத நடிகர்கள் நடித்திருந்ததும், வட மாநில மக்களின் வாழ்வியலை கொண்டிருந்ததும் படத்தின் தோல்விக்கு காரணம் என்பார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!