
ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால்
இதில் ஹீரோயின் நிதி அகர்வால் பேசியதாவது: ‛‛எனக்கு மிகவும் சவாலான படமாக ஹரிஹர வீர மல்லு படம் இருந்தது. கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் வேறு எந்த படத்திலும் நடிக்காமல் இதற்காக மட்டும் தேதிகளை ஒதுக்கி நடித்துள்ளேன். அதற்கு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரின் ஒத்துழைப்பு அதிகமாக இருந்தது.
பவன் கல்யாண் உடன் நடித்தது என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய கிப்ட். அவ்வளவு அற்புதமான நடிகர், நல்ல கோ ஸ்டார். மனித நேயம் மிக்கவர். இந்த படம் வெளியான பிறகு என்னை தேடி பல வாய்ப்புகள் நிச்சயம் வரும். தமிழிலும் அடுத்ததாக ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் தமிழ்த் திரையுலகிளும் என்னை பார்க்கலாம்"" என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!