
தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் அங்கீகாரம்! பர்ஸ்ட் லுக் வெளியானது!!
தமிழில் வெளியான "அறம், ஐரா, ஹீரோ, டாக்டர், அயலான்" என பல படங்களை தயாரித்தவர் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் ராஜேஷ். இவர் தற்போது ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் குறித்த வீடியோ ஒன்று நேற்று வெளியான நிலையில், இன்று அப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்த படத்திற்கு "அங்கீகாரம்" என்று டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.
மேலும், இந்த படத்தை ஜே.பி.தென்பதியான் என்பவர் இயக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார். விளையாட்டு சம்பந்தப்பட்ட கதையில் உருவாகும் இந்த படத்தில் தயாரிப்பாளர் ராஜேஷுடன் மன்சூர் அலிகான், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!