
24 ஆண்டுகளுக்கு பின் தமிழில் ரவீனா டாண்டன்
இந்நிலையில் 24 ஆண்டுகளுக்கு பின் ரவீனா தமிழில் ரீ-என்ட்ரி ஆகிறார். ‛ஜென்டில்வுமன்" படத்தை இயக்கிய ஜோஷுவா சேதுராமன், ‛லாயர்" என்ற படத்தை இயக்குகிறார். நீதிமன்றம் தொடர்பான கதையில் உருவாகும் இப்படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக வக்கீல் வேடத்தில் நடிப்பதோடு தயாரிக்கவும் செய்கிறார். இந்த படத்தில் தான் ரவீனாவும் வக்கீலாக முதன்மை வேடத்தில் நடிக்கிறார். இதற்கான அறிவிப்பை படக்குழுவினர் அவரின் போஸ்டர் உடன் வெளியிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜுனில் துவங்குகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!