
ரோல் மாடலுக்கு முத்தமிட்டு, மண்டியிட்டு மரியாதை செலுத்திய அஜித்
நடிகர் அஜித் குமார் சமீபகாலமாக சர்வதேச கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். தற்போது நெதர்லாந்தில் ஜிடி 4 ஐரோப்பிய கார் பந்தயப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில் கார் ரேஸில் தனது ரோல் மாடலும், மறைந்த கார் ரேஸ் வீரருமான அயர்டன் சென்னா நினைவு சிலை முன் அஞ்சலி செலுத்தும் வீடியோ வெளியாகியுள்ளது.
கடந்த 1994-ம் ஆண்டு மே 1 அன்று நடைபெற்ற சான்மேரினோ கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தய போட்டியின் போது நடந்த விபத்தில் உயிரிழந்த கார் ரேஸ் வீரரும், மூன்று முறை பார்முலா 1 உலக சாம்பியன்ஷிப்பை வென்ற பிரேசில் நாட்டு வீரருமான அயர்டன் சென்னா என்பவரின் சிலை இமோலா சர்க்யூட்டில் டம்பெரெல்லோ கார்னரில் உள்ளது.
இங்கு சென்ற நடிகர் அஜித் சிலை முன் மண்டியிட்டு மரியாதை செலுத்தினார். அவரது காலடியில் ஹெல்மெட்டை வைத்து, காலை முத்தமிட்டார். இதனை ரேஸ் டீம் இன்ஸ்டாகிராமில் வீடியோவாக பதிவேற்றியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!