
படப்பிடிப்பில் ராஷி கண்ணா காயம்
நேற்று நடந்த படப்பிடிப்பில் ராஷி கண்ணா உயரமான மேடை ஒன்றில் இருந்து கீழே குதித்தார். இதில் டைமிங் மிஸ்சாகி தரையில் விழுந்தார். இதில் அவரது முகத்தில் காயம் ஏற்பட்டது. உள்காயத்தால் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்தது. கை மற்றும் கால்களிலும் காயம் ஏற்பட்டது.
முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மருத்துமனையில் சிகிச்சை பெற்றார். சில நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ராஷிகா இல்லாத காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ராஷி கண்ணா தனது இன்ஸ்டாகிராமில், "சில கதாபாத்திரங்களுக்கு தேவையானதை செய்துதான் ஆக வேண்டும். ஏற்படும் காயங்களை பொருட்படுத்தக்கூடாது. நாமே புயல் ஆன பிறகு, இடி-மின்னல் என்ன செய்துவிடும்?", என்று பதிவிட்டுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!