
நாயகன் படத்தின் தொடர்ச்சியா... தக் லைப் : கமல் பதில்
அடுத்த தலைமுறை நடிகர்கள் என்னை பற்றி பேசுகிறார்கள். அதுவே எனக்கு கிடைத்த பெருமை. அவர்கள் இன்னும் மேலே உயரணும் என்பது தான் என் ஆசை. என்னை பார்த்து அவர்கள் கற்றுக் கொள்வதாக சொல்கிறார்கள். நானும் அவர்களை பார்த்து நிறைய விஷயம் கற்கிறேன். ஏஐ கற்க தான் போனேன். ஆனால் அது நம்மள விட பெருசு. அதை முழுமையாக தெரியாமல் நான் பயன்படுத்த மாட்டேன். வாழ்வில் மரணத்தை தவிர்க்க முடியாது. இருப்பதற்குள் நாம் என்ன பண்ண முடியுமோ அதை செய்து விடணும்"" என்றார்
சிம்பு பேசுகையில், ‛‛பொதுவாக நாம் நம்முடைய காட்சி பற்றி தான் கவனம் செலுத்துவோம். ஆனால் கமல் அவருடையது மட்டுமின்றி எல்லோருடைய காட்சி, வசனங்களையும் உற்று கவனிப்பார். இதுமாதிரி அவரிடம் நிறைய விஷயம் கற்றுக் கொண்டேன். இப்போது என்னை பார்ப்பவர்கள் முன்பை விட அமைதியான ஆளாக இருப்பதாக சொல்கிறார்கள். ஏன் என தெரியவில்லை. அந்த வயதில் அப்படி இருந்தேன். இந்த வயதில் இப்படி இருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் கமல் அவராக இருந்தார். நான் நானாக இருந்தேன். என் திருமணம் நேரம் வரும்போது கண்டிப்பாக நடக்கும்"" என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!