
பிளாஷ்பேக் : முதன் முதலாக 3 வேடங்களில் நடித்த சின்னப்பா
இந்த வரிசையில் அவர் அப்பா, மகன், பேரன் என 3 வேடங்களில் நடித்த படம் "மங்கையர்கரசி". இந்த படத்தை மேற்கு வங்க இயக்குனர் ஜிதின் பட்டர்ஜி இயக்கினார். சின்னப்பா ஜோடியாக கண்ணாம்பா டைட்டில் கேரக்டரில் நடித்தார். இவர்களுடன் அஞ்சலி தேவி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் உள்பட பலர் நடித்திருந்தார்கள்.
ஜி.ராமநாதன், குன்னக்குடி வைத்தியநாத அய்யர், சி.ஆர்.சுப்பாராமன் ஆகியோர் இசை அமைத்திருந்தனர். பாக்யா பிக்சர்ஸ் சார்பில் நாகூர் அஹமது தயாரித்திருந்தார். இந்த படத்தில் என்.எஸ்.கிருஷ்ணனும் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!