
தமிழுக்கு வரும் துணை முதல்வர் படம்
சமீபகாலமாக தமிழக அரசியலில் அதிக ஆர்வம் காண்பிக்கிறார் பவன் கல்யாண். அவ்வப்போது தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு வருகிறார். அந்தவகையில் அவர் நடித்த ஹரிஹர வீரமல்லு படத்தையும் தமிழில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.
இந்த படத்தை த யாரித்து இருப்பவர் துாள், கில்லி, இந்தியன் போன்ற படங்களை தயாரித்த ஏ.எம்.ரத்னம். கடந்த ஆண்டு அவர் விஜய் நடித்த கில்லி படத்தை ரீ-ரிலீஸ் செய்தார். அந்த படம் மீண்டும் ஹிட்டானது. அவரும் தமிழில் ரிலீஸ் செய்ய விரும்பி இருக்கிறார். கிரிஷ் மற்றும் ஜோதி கிருஷ்ணா இணைந்து இந்த படத்தை இயக்கியுள்ளனர். இந்த படத்தில் கீரவாணி இசையில் தெலுங்கில் பவன் கல்யாண் ஒரு பாடலும் பாடியிருக்கிறார். சிம்புவுடன் ஈஸ்வரன் படத்தில் நடித்த நிதி அகர்வால் இதில் ஹீரோயினாக நடித்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!