
நடிகை சிம்ரனுக்கு துணையாக டிவி நடிகை ஆனந்தி
"டூரிஸ்ட் பேமிலி" படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய புரமோஷன்களில் அவர் அதிகம் கலந்து கொள்ளவில்லை. வெளிநாட்டில் இருந்ததுதான் அதற்கு ஒரு காரணம். ஆனால், படத்தின் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி சில தினங்களுக்கு முன்பு நடந்த போது அதில் கலந்து கொண்டு உருக்கமாகப் பேசினார் சிம்ரன்.
நிகழ்ச்சிக்கு சிம்ரன் வந்த போது அவருடன் டிவி நடிகை ஆனந்தியும் கூடவே வந்திருந்தார். சிம்ரனின் பெண் பவுன்சர் போல பக்கத்திலேயே இருந்தார். விசாரித்த போது சிம்ரனுக்கு கடந்த சில வருடங்களாக மேனேஜர் போல எப்போதும் துணையாக ஆனந்தி இருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!